சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் 16 வது வருடாந்த பொதுக் கூட்டமும் வீரர்கள் கெளரவிப்பும்
அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் 16 வது வருடாந்த பொதுக் கூட்டமும் வீரர்கள் கெளரவிப்பும் சாய்ந்தமருது ஸீ பிரீஸ் ரெஸ்ரோரண்டில் கழகத்தின் செயலாளர் இல்யாஸ் அஸீஸின் நெறிப்படுத்தலில் கழகத்தின் தலைவர் எம் ஏ.அஹ்ஸன் அக்தர் தலைமையில் சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோஸ்தர் எஸ்.எல்.சபூர்தீன் , ஓய்வுபெற்ற ஆசிரியரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான எம்.ஐ.எம்.அஸ்ஹர், கழக முக்கியஸ்தர் எஸ்.எச் இஹ்லாஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

கடந்த வருடங்களில் கழகத்தின் வெற்றிக்கு பங்களிப்பு செய்த கழக வீரர்கள் பலர் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

கழகத்தின் 2023 மற்றும் 2024 ஆண்டுகளுக்கான நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.
எம்.ஏ.அஹ்ஸன் அக்தர் தலைவராகவும் , இல்யாஸ் அஸீஸ் செயலாளராகவும் , ஆஸாத் காமில் பொருளாளராகவும், முஹம்மட் றிஸ்வின் கழக முகாமையாளராகவும் , இஸ்கி ஜீஸான் உப தலைவராகவும் , முஹம்மட் அஸாம் உதவி செயலாளராகவும், நிரோஸ் அணித்தலைவராகவும் , விதாத் உதவி அணித்தலைவராகவும் , நிரோஸ் கணக்கு பரிசோதகராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :