மகளிர் அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளை வலுவூட்டும் செயலமர்வு !



நூருல் ஹுதா உமர்-
லங்கையில் பாலியல் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தனிக்கவும், சமூக ஒற்றுமையை மேம்படுத்தவும் பெண்களை அதிகராமளித்தல் எனும் கருப்பொருளின் கீழ் "கிழக்கு திரிய பெண்கள் அபிவிருத்தி மன்றம்" இனால் தெரிவு செய்யப்பட்டு பெண்கள் அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளுக்கான ஒருநாள் வலுவூட்டல் செயலமர்வு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் (04) பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில்இடம்பெற்றது.

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட நலிவுற்ற மற்றும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களில் ஏற்படும் பாலின அடிப்படையிலான வன்முறைகள், அவற்றை குறைப்பதற்கான வழிமுறைகள், குடும்ப சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள், பெண்களுக்கான சட்ட ஆலோசனைகள், குடும்ப வன்முறைகளினால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகளும் அவற்றுக்கான ஆலோசனைகளும் போன்ற தலைப்புக்களை உள்ளடக்கி இச் செயலமர்வு நடாத்தப்பட்டது.

இச்செயலமர்விற்கு வளவாளர்களாக நிறுவனத்தின் ஆலோசகர் சட்டத்தரணி ஏ.சாஜித் அஹமட், சட்டத்தரணி எல்.கலைவாசனா (சட்ட உதவிகள் ஆணைக்குழு), சமூக செயற்பாட்டாளர் ஐ.எல். ஹாசிம் சாலிஹ், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப், செயற்திட்ட உத்தியோகத்தர் பி.எம். கலாமுடீன் (சட்ட உதவிகள் ஆணைக்குழு) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிழக்கு திரிய பெண்கள் அபிவிருத்தி மன்றம் நிறுவனத்தின் செயற்திட்ட முகாமையாளர் திருமதி. சமந்தி அமுன உடகெதர, வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி. சமாலி, வெளிக்கள உதவியாளர் பூர்னிமா, ஆகியோர் செயலமர்வை வழிப்படுத்தினர். இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் ஆர்.எஸ். றிம்ஸியா ஜஹான், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ். சபறுல் ஹஸீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டு செயலமர்வை நெறியாழ்கை செய்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :