கல்வி அமைச்சின் சமய விழுமியங்கள் பிரிவு ஏற்பாடு செய்த கபொத உயர்தர மாணவர்களுக்கான இந்து நாகரீகம் பாட செயலமர்வு நேற்று நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை வலயத்தில் இம்முறை கபொத உயர்தர பரீட்சையில் இந்து நாகரீக பாடத்தில் தோற்ற இருக்கின்ற 92 மாணவர்களுக்கான இந்த செயலமர்வு நேற்று அதிபர் சீ. பாலசிங்கன் தலைமையில் நடைபெற்றது .
கல்வி அமைச்சிலிருந்து சமயங்கள் விழுமிய பிரிவின் பிரதிக்கல்வி பணிப்பாளர் எஸ் சுந்தர லிங்கம் வளவாளராக கலந்து கொண்டார்.
அங்குரார்ப்பண நிகழ்வில் சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் எஸ் எம் எம் அமீர், சம்மாந்துறை வலய உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, ஆசிரிய ஆலோசகர்களான கே.இரத்னேஸ்வரன், எஸ். அர்ஜுனன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
சம்மாந்துறை வலயத்திலுள்ள 8 தமிழ் பாடசாலைகளை சேர்ந்த 92 மாணவர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள்.

0 comments :
Post a Comment