கிழக்கின் மூத்த இலக்கிய ஆளுமை கலாபூஷணம் வித்தகர் இரா.கிருஸ்ணபிள்ளை இன்று காலமானார்!வி.ரி.சகாதேவராஜா-
லக்கிய உலகில் "இராகி" எனும் புனைப்பெயரால் அழைக்கப்படும் கிழக்கு மாகாணத்தின் மூத்த இலக்கிய ஆளுமை கலாபூஷணம் வித்தகர் இரா.கிருஸ்ணபிள்ளை இன்று (20) செவ்வாய்க்கிழமை அதிகாலை காரைதீவில் காலமானார்.

84வயதான பிரபல எழுத்தாளர் இராகியின் பூதவுடல் நாளை (21) புதன்கிழமை காலை 10 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

காரைதீவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் இரா.கிருஸ்ணபிள்ளை சிறந்த ஆசிரியராக அதிபராக சேவையாற்றி ஓய்வு பெற்றவராவார்.

இலக்கிய உலகில் கவிதை ,சிறுகதை நாவல் ,நாடகம், கட்டுரை ,வில்லுப்பாட்டு என பலதரப்பட்ட இலக்கிய துறைகளில் 60 ஆண்டு கால ஈடுபாடு உடையவர்.
12க்கும் மேற்பட்ட நூல்களை அச்சிட்டு வெளியிட்டவர்.

1939. 09. 15ஆம் தேதி பாண்டிருப்பில் பிறந்த இராமக்குட்டி கிருஷ்ணபிள்ளை காரைதீவில் கரம்பிடித்தவராவார். 1979இல் வில்லிசையில் விபுலானந்தர் என்ற முதல் வில்லுப்பாட்டை தயாரித்தார் .

பாண்டியூர்இராகி. இராகி என புனைபெயரில் எழுதி வருபவர் .

நாட்டின் பல பகுதிகளில் ஆசிரியப் பணியாற்றி இறுதியில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் பிரதி அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

கல்முனை கல்வி மாவட்ட ஆசிரியர் தின போட்டியில் முதலிடம் பெற்ற பல நாடகங்களை எழுதி இருக்கின்றார். ஆன்மிக இலக்கிய சிறந்த பேச்சாளர். தமிழ் தேசிய உணர்வாளர்.பீரங்கிப் பேச்சாளர்.

அம்பாறை மாவட்டத்தில் 2008 களில் "திகாமடுல்ல அபிமானி" தேசிய மட்டத்தில் "கலாபூஷணம்" போன்ற விருதுகளை பெற்றவர்.
கிழக்கின் உன்னத "வித்தகர் "விருதையும் பெற்றுள்ளார்.

" உறவுகள் ",பகையால் உதயமான உறவு" உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட இலக்கிய படைப்புகளை படைத்திருந்தார்.

இவர் ஒரு சமுக சேவையாளருமாவார்.
காரைதீவு கிராமத்தில் கிராம அபிவிருத்தி சங்க தலைவராக சிக்கனக்கடன் கூட்டுறவு சங்கம் பொருளாளராக சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றத்தின் முக்கிய உறுப்பினராக காரைதீவு பிரதேச செயலக கலாசார பேரவை ஆலோசகராக
இந்து சமய விருத்தி சங்க ஆலோசகராக கம்பன் கலைக் கழக ஸ்தாபகராக என பலதரப்பட்ட சேவைகளில் செயல்பட்டு வந்திருந்தார்.
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையின் ஆலோசகராக செயற்பட்டார்.

அம்பாறை மாவட்ட சிறுகதை போட்டியில் முதலிடம் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றவர் சிறந்த சமூக சேவையாளரான "இராகி"
"உறவுகள் "என்ற சிறுகதைத் தொகுதியை முதல் படைப்பாக பிந்திய காலத்தில் வெளியிட்டார்.

"உறவுகள்" சிறுகதை தொகுதி, "இராகியின் கவிதைகள்", "ஆன்மிகமும் விழுமியங்களும்" கட்டுரை, "பகையால் உதயமான உறவு" நாடகம் ,"அந்த ஒரு நிமிடம் "சிறுகதை, "என்னில் பனித்த துளிகள்" கவிதை, "நான் நீயானால்" குறுநாவல், "பாடித்திரிந்த பறவை" நாவல், "தெய்வதரிசனம்" கவிதை தொகுதி, உள்ளிட்ட பல அற்புதமான காத்திரமான நூல்களை தந்தவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :