இம்முறை வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றின்படி கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மீராவோடை அல் ஹிதாயா தேசிய பாடசாலையிலிருந்து 25 மாணவர்கள் பல்கலைக்கழகங்கள் செல்ல தகுதி பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் கே.எல்.எம்.சபாஹிர் தெரிவித்தார்.
அந்தவகையில், கணித விஞ்ஞானத் துறையில் 13 மாணவர்களும், கலை, வர்த்தக துறையில் 12 மாணவர்களும் அடங்களாக மொத்தமாக 25 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.
இதில், இல்யாஸ் முகம்மத் இஸ்ரத் எனும் மாணவன் 2 ஏ, சீ, பெறுபேறுகள் பெற்று பொறியியல் துறைக்கு தெரிவாகியுள்ளார்.
இம்மாணவனை மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா மற்றும் ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் ஆகியோர் நேரில் சென்று பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கும் தனது சேவைக் காலத்தில் வழிகாட்டிய மரணமடைந்த பாடசாலையின் முன்னாள் அதிபர் யூ.எல்.எம்.புஹாரி மற்றும் தற்போதைய அதிபர் கே.எல்.எம்.சபாஹிர், கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் பாடசாலை நலன்விரும்பிகள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment