கத்தார் சஃபாரி மால் நடாத்தும் "FRAMES SEASON 5" புகைப்பட போட்டியில் இலங்கை சாய்ந்தமருதை சேர்ந்த இளைஞர் ஜே. எம். பாஸிதின் புகைப்படமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் சிறு வயதில் இருந்து டிஜிட்டல் மற்றும் புகைப்பட துறையில் ஆர்வம் கொண்டவர். இவர் பல போட்டிகளிலும் பங்கு பற்றியுள்ளார்.
இப் புகைப்பட போட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதில் தெரிவு செய்யப்பட்ட முப்பது புகைப்படங்களை ஆகஸ்ட் 17 தொடக்கம் ஆகஸ்ட் 30 வரை கத்தார் அபு ஹமூரில் உள்ள சஃபாரி மாலில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் மக்களினால் புகைப்படங்களுக்கு வாக்களித்து மூன்று வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
முதலாவது வெற்றியாளருக்கு 3000 ரியால், இரண்டாவது வெற்றியாளருக்கு 2000 ரியால், மூன்றாவது வெற்றியாளருக்கு 1000 ரியால் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என இரண்டு பிரிவுகளில் பரிசு வழங்கப்பட இருக்கிறது.
இதில் பல நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment