காரைதீவு கோட்ட மாளிகைக்காடு கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை நவீன தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுப்பதற்கு, பாடசாலையின் முக்கிய தேவையாக இருந்த பல்லூடக உபகரணத்தொகுதியினை (Multimedia system ) பாடசாலையின் ஆசிரியை திருமதி ஜே. இஸ்மாலெப்பை அவர்களின் முயற்சியினால் அமெரிக்காவில் தொழில்புரியும் பொறியியலாளர் ஐ.எல்.எம் நிப்ராஸ் அவர்களினால் அண்மையில் அன்பளிப்பு செய்யப்பட்டது.
உபகரணத்தொகுதி இன்று ஆசிரியை திருமதி ஜே. இஸ்மாலெப்பை அவர்களினால் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். அஸ்மியிடம் மாணவர் பாவனைக்காக பாடசாலையில் வைத்து கையளிக்கப்பட்டது.



0 comments :
Post a Comment