ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய கொன்சுலேட் ஜெனரல் அலுவலகத்தின் கன்சல் ஜெனரல் டிபின் பி ஆர் சம்மாந்துறைக்கு இன்று (08) விஜயமொன்றை மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நெளஷாட் அவர்களை பிரதேச சபை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது பிரதேசத்தின் கல்வி, கலாச்சாரம், அபிவிருத்தி மற்றும் சமகால அரசியல் தொடர்பாக கேட்டரிந்து கொண்டதுடன், இலங்கையில் அண்மைய காலமாக நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரதன்மையற்ற நிலைமையால் துன்ப சுமைகள் மக்கள் மீது நாளுக்கு நாள் சுமத்தப்பட்டு வருகின்றன. விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் சொல்லொணா துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை தொடா்பாகவும் எடுத்துக் கூறப்பட்டதுடன், எதிர்காலத்தில் பிரதேசத்தின் கல்வி உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளையும் மேம்படுத்த இந்தியா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் தொடர்பாக தவிசாளர் வலியுறுத்தினார்.
0 comments :
Post a Comment