சாய்ந்தமருது மிஸ்பாஹூல் ஹுதா அஹதிய்யாப் பாடசாலையினால் முஹர்ரம் புதுவருடத்தினை முன்னிட்டு மாணவர்களின் கலை நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் 2022.08.07 ஞாயிறு சாய்ந்தமருது கமு/அல்- ஜலால் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மிஸ்பாஹூல் ஹுதா அஹதிய்யாப் பாடசாலையின் அதிபர், கலாசார உத்தியோகத்தர் எ.எம்.தெளபீக் (நளீமி) யின் தலைமையில், இவ் அஹதிய்யாப் பாடசாலையின் ஆசிரியர் எம்.எச்.எம்.சியாமின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்களது கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றது.
கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்த மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்வில் அதிதிகளாக கமு/ அல்-ஜலால் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.எம்.சைபுதீன் மற்றும் அப்பாடசாலையின் இஸ்லாம் பாட ஆசிரியர் மௌலவி எம்.ஐ.எம்.இத்ரீஸ் அவர்களும் சாய்ந்தமருது சமூக அமைப்பின் தலைவர் எ.சி.அன்வர், அறிவிப்பாளர் எ.றொஸான் முஹம்மட் உள்ளிட்ட
சாய்ந்தமருது மிஸ்பாஹூல் ஹுதா அஹதிய்யாப் பாடசாலையின் ஆசிரிய ஆசிரியைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment