இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதை அடுத்து அவரை விடுதலை செய்யக் கோரி இன்றும் நாடு பூராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை இடைவேளை நேரத்தில் ஆசிரியர்களால் மேற்கொள்ளபட்டு வருகின்றது.
அந்த வகையில் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் ஆசிரியர்களால் இன்று காலை 10.30 தொடக்கம் 10.45 வரை பாடசாலை முன்றலில் ஜோசப் ஸ்டாலினினை விடுதலை செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்த இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் அல்-ஜலால் வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன் கல்முனைக்கான இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதியும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment