பிரதேச செயலக கழகங்களுக்கிடையிலான நடாத்தப்பட்டு வந்த மாவட்ட விளையாட்டு விழா நிகழ்வில் மெய்வல்லுனர் போட்டியில் தம்பலகாமம் பிரதேச கழக அணியினர் சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டனர்.
குறித்த மாவட்ட மட்ட இறுதிப் போட்டி நிகழ்வானது மாகாண விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர் என்.நௌபீஸ் அவர்களின் கண்காணிப்பின் கீழ் கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் இன்று (21) இடம் பெற்றது.இதன் போது மெய்வல்லுனர் போட்டியில் 10 தங்கப் பதக்கங்களையும், 06 வெள்ளி பதக்கங்களையும், 03 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 19 பதக்கங்களை தனதாக்கிக் கொண்டனர்.
இதில் மைதான நிகழ்ச்சி நிரல் வீரராகவும், அனைத்து சகல துறை வீரராகவும் ஏ.ஆபித் தெரிவாகினார்.தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க விளையாட்டு உத்தியோகத்தர் கே.டி.ஹாரிஸ் குறித்த வீரர்களுக்காக திறம்பட பயிற்சியளித்து வந்துள்ளார். பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சார்பாகவும் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.

0 comments :
Post a Comment