இலங்கையில் ஐக்கிய நாடுகளின் முகவர் நிலையங்களின் செயற்பாடுகளுக்கு வழிகாட்டும் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி கூட்டுறவுச் சட்டகத்தை (UNSDCF) 2023-2027 அறிமுகப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி தொடர்புடைய கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கை எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக, உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களைப் பாதுகாக்க ஐ.நா தலையீடு தேவை எனவும் வலியுறுத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையுடன் முறையான மற்றும் நேர்மறையான ஈடுபாட்டின் முக்கியத்துவமும் கவனத்தில் கொள்ளப்பட்டது. திரு David McLachlan-Karr உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு தற்போது இலங்கை வந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் திருமதி ஹனா சிங்கரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
0 comments :
Post a Comment