காலாபூசனம் ஸக்கியா சித்தீக் பரீட் அவா்கள் எழுதிய நமது வரலாற்று ஆளுமைகள் எனும் முதலாவது பாகம் 1 நுால் வெளியீட்டு வைபவம்



அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு சாஹிரா, டி.எஸ் சேனாநாயக முஸ்லிம மகளிா் கல்லுாாிகளில் சேவையாற்றி ஓய்வு பெற்றவரும் சிரேஸ்ட எழுத்தாளரருமான ஆசிரியை காலாபூசனம் ஸக்கியா சித்தீக் பரீட் அவா்கள் எழுதிய நமது வரலாற்று ஆளுமைகள் எனும் முதலாவது பாகம் 1 நுால் வெளியீட்டு வைபவம் நேற்று 20.08.2022 கொழும்பு தபாலக கேட்போா் கூடத்தில் சிரேஸ்ட ஊடகவியலாளா் என்.எம். அமீன் தலைமைில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நாடளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவுப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா். நுாலின் முதற் பிரதியை முஷான் பவுண்டேசன் தலைவா் அல்ஹாஜ் முஸ்லிம் சலாஹுதீன் பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக் கொண்டாா். அத்துடன் கௌரவ அதிதியாக முன்னாள் ஆளுனர் அசாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபு ரஹ்மான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு ஜ.தே.கட்சியன் பிரநிதியுமான சபீக் ரஜாப்டீன், , முஸ்லிம சமய திணைக்களத்தின் பணிப்பாளா் இப்ராஹீம் அன்சாா், ஆகியோறும் கலந்து கொ்ண்டனா். நுால்ஆய்வு பற்றி கலாநிதி ரவுப ்ஸெயின், மற்றும் , புனா் வாழ்வு புனரமைப்பு ,வீடமைப்பு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளா் நாயகம் ஏ.எம்.நஹியா ஆகியோா்களும் ஆய்வுரை நிகழ்த்தினாா்கள்.கவிவாழ்த்துரையை இஸ்லாமிய பாடகி நுாஜாஹான் மர்சூர்கும் பாடினாா்.

இந் நுாலில் முஸ்லிம் சமுகத்திலும் நாட்டுக்காகவும், கல்விக்காகவும் சேவையாற்றி மறைந்த 150 தலைவா்களது வரலாறு பதியப்பட்டுள்ளது. முதலாவது பாகத்தில் 568 பக்கங்களைக் கொண்டது. அறிஞா் சித்திலெப்பை, கலாநிதி ரீ.பி. ஜாயா, கலாநிதி எம். ஏ அசீஸ், நளீம் ஹாஜியாா், றிபாய் ஹாஜியாா், கலாநிதி எம்.ஏம். சுக்ரி, சேர் ராசிக் பரீட், எம்.எச்.எம். அஸ்ரப், என்.டி.எச்.அப்துல் கபூர், கேட் முதலியாா் எம்.எஸ் காரியப்பர். ஏ.சி.எஸ் ஹமீட், உடபட 150 பேர்களது வரலாறுகள் பதியப்பட்டுள்ளன. மிகுதி 2ம் பாகமும் எதிர்வரும் வருடம் வெளியிடப்படும். 20 ஆம் ,நுாற்றாண்டில் இலங்கை முஸ்லிம்களிடையே வாழ்ந்த தனிநபா்களை வரலாற்றை தேடி எதிர்கால சமுகம் இதனை அறிந்து கொள்வதற்காக திருமதி சக்கியா ஆசிரியை நாட்டின் நாலாபாகத்திற்கும் சென்று 550க்கும் மேற்பட்ட தகவல்களை திரட்டியுள்ளாா். ஆசிரியை தனி தேடல் முயற்சியை பாராட்டி கௌரவித்தாா்கள். அடுத்த வரலாற்று நுாலை எழுதுவதற்கு முஸ்லிம் சமுகம் உதவ வேண்டும் எனவும் அங்கு உரையாற்றி முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம் வேண்டிக் கொண்டாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :