கேட்டேன்.... (கவிதை )கேட்டேன்....
++++++++++
Mohamed Nizous


போலின் இல்லாப் பெற்றோல் கேட்டேன்
போலி இல்லா அரசியல் கேட்டேன்
ஊழல் இல்லாத தலைவன் கேட்டேன்
ஊத்தை அள்ள ட்ரக்டர் கேட்டேன்
கொஞ்சக் காசில் அங்கர் கேட்டேன்
குறைந்த விலையில் அரிசி கேட்டேன்
பஞ்சம் உரைக்கா அமைச்சர் கேட்டேன்
பஞ்சர் ஆகா அரசாங்கம் கேட்டேன்
டாலர் விலைகள் குறையக் கேட்டேன்
டாம் டும் தலை-மை வெளுக்கக் கேட்டேன்
நாளும் அடுப்பு எரியக் கேட்டேன்
நாட்டில் கடுப்பு குறையக் கேட்டேன்
வெட்டாது தருகிற மின்சாரம் கேட்டேன்
ஷெட்டில் வராத மரணம் கேட்டேன்
கண்ணீர்ப் புகையில்லா கூட்டம் கேட்டேன்
காலி முகத்திடல் ஏற்றம் கேட்டேன்
பாதியில் ஒளிந்தவன் அலையக் கேட்டேன்
பாராளுமன்றம் கலையக் கேட்டேன்
பதுக்கல் யாவாரம் குலையக் கேட்டேன்
பழைய நோட்டில் சம்பளம் கேட்டேன்
அச்சம் இல்லா இலங்கை கேட்டேன்
அச்சு இயந்திரம் உடையக் கேட்டேன்
பொய்யான 'ஞானம்' ஒளியக் கேட்டேன்
வெய்யில் விஞ்ஞானி ஓடக் கேட்டேன்
மெய்யை சொல்லும் மீடியா கேட்டேன்
மீண்டும் எழும்பா கொரோனா கேட்டேன்
கையூட்டு வாங்காத காவலர் கேட்டேன்
கவரேஜ் போகா நெட்வேர்க் கேட்டேன்
வட்டக்கா போடாத ரோல்ஸ்கள் கேட்டேன்
வாழைக்காய் போடாத பெட்டிஸ் கேட்டேன்
ரொட்டியில் சுரண்டாத ஹோட்டல் கேட்டேன்
ரோட்டை புளக் பண்ணா ஆட்டோ கேட்டேன்
கூட்டி விற்காத லாம்பெண்ணெய் கேட்டேன்
கூட்ட மாபியா மறையக் கேட்டேன்
நாட்டில் நல்லது நடக்கக் கேட்டேன்
பாட்டில் அதனை உரைத்துக் கேட்டேன்......!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :