பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பதவியேற்பு!பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அரசமைப்பு மற்றும் 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 04வது சரத்துக்கு அமைய நாடாளுமன்றம் நாளை (16) கூடுகின்றது.
ஜனாதிபதி பதவியில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம் குறித்து, நாடாளுமன்ற செயலாளரால், சபைக்கு அறிவிக்கப்படும்.
ஜனாதிபதி பதவிக்கான வேட்பு மனுக்கல் 19 ஆம் திகதி கோரப்படும்.
20 ஆம் திகதி வாக்கெடுப்பை நடத்த உத்தேசம்.
சஜித்தை களமிறக்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு - சுதந்திரக்கட்சி உட்பட பல கட்சிகள் ஆதரவு
ஜே.வி.பியும் தீவிர கலந்துரையாடலில்
ஜனாதிபதி பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யாதிருப்பது குறித்து மொட்டு கட்சி பரீசிலனை
பொது இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதியை தெரிவு செய்யுமாறு சர்வமதத் தலைவர்கள் கோரிக்கை
இலங்கை நிலைவரம் குறித்து சர்வதேசம் கழுகுப்பார்வை


தில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்டார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் சபாநாயகரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் தொடர்பில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்த சபாநாயகர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி முதல் தனது பதவியை சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் இலங்கையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் ஊடாக சபாநாயகருக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற பின்னர் இது தொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :