கிழக்கு ஆளுநர் மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனக் காட்ட முனைகிறார்- இம்ரான் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு -ஹஸ்பர்-
கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத் இந்தப் பொருளாதார நெருக்கடியால் கிழக்கு மாகாண மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனக் காட்ட முனைகின்றார் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்

ஊடகங்களுக்கு இன்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அவர் மேலும் குறித்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
எரிபொருள் நெருக்கடி காரணமாக இவ்வாரம் கிழக்கு மாகாணப் பாடசாலைகள் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய தினங்களில் மாத்திரம் நடைபெறும் என கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி என்.புள்ளநாயகம் தகவல் வெளியிட்டிருந்தார். சில மணித்தியாலயங்களுள் அதே மாகாணக் கல்விப் பணிப்பாளர் வாரத்தில் 5 தினங்களும் பாடசாலை நடைபெறும் என அறிவித்துள்ளார்.
அவரது இந்த பின்னைய அறிவிப்புக்கு கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் நிரப்புவதற்காக அதிபர், ஆசிரியர்கள் நாட்கணக்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்து நிற்கின்றனர். மாணவர் பஸ்சேவைக்கு எரிபொருள் இல்லை. இதனால் தான் நகர்ப்புறப் பாடசாலைகளை பாடசாலைகளை மூடும் தீர்மானம் கல்வி அமைச்சினால் எடுக்கப்பட்டது.

இதே பிரச்சினை கிழக்கு மாகாணத்திலும் உண்டு. ஏராளமான ஆசிரியர்களினதும், கல்விப் புலத்தின் ஏனையோரினதும் மோட்டார் சைக்கிள்கள் பெற்றோல் இன்மையால் வீட்டிலே முடங்கியுள்ளது. இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஆளுநர் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. ஆனால் பாடசாலைகளை வாரத்தில் 5 நாட்களும் நடத்த வேண்டுமென என அவர் பணித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என அவர் காட்ட முனைவதே அவரது இந்த முடிவுக்குக் காரணமாகும். அவரதும், அவரது பரிவாரத்தினரது வாகனங்களுக்கும் எரிபொருள் பிரச்சினை இல்லை என்பதால் ஏனையோருக்கும் அப்படி இருப்பதாகவே அவர் நினைக்கிறார். மக்களின் கஷ;ட நிலையை இன்னும் அவர் உணரவில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.
இந்த அரசு சகல அரச உத்தியோகத்தர்களையும் வீதிக்கும், வரிசைக்கும் கொண்டு வந்து விட்டது. பல அரச உத்தியோகத்தர்கள் நாளாந்தம் எரிபொருள் வரிசைகளில் நிற்கின்றனர். இந்த நிலையை கிழக்கு ஆளுநர் உணர வேண்டும்
சுகாதாரத்துறையைச் சேர்ந்தோருக்கு வாரத்தில் ஒரு நாள் எரிபொருள் வழங்குவதாக அரசு அறிவித்தாலும் அதுவும் திருப்திகரமாக இல்லை. அந்த நாளில் அநேகமான சுகாதாரத்துறையினர் எரிபொருள் நிரப்பு நிலைய வரிசைக்கு வந்து விடுகின்றார்கள். இதனால் வைத்தியசாலைகளில் சுகாதார சேவை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. பல நோயாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளே இதற்கு காரணமாகும். மக்களின் சுமையைக் குறைப்பதற்கு எந்தவொரு திட்டமும் ஜனாதிபதியிடம் இல்லை. அதேபோல பிரதமர் மற்றும் அமைச்சர்களிடமும் இல்லை. இதுவே மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :