சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கல்விமான்களினால் வழிகாட்டல் கருத்தரங்கு !



நூருல் ஹுதா உமர்-
ருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட 2022 ஆம் ஆண்டு மருதமுனை பாடசாலைகளிலிருந்து க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலில் பள்ளிவாசல் தலைவரும், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம்.ஐ.எம். முஹர்ரப் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

உயர்தரப் பிரிவில் பொருத்தமான கற்கை துறைகளை தெரிவு செய்தலும் இலகுவாக பல்கலைக்கழக அனுமதி பெறக்கூடிய பாடங்களை தெரிவு செய்தலும் தொடர்பில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக பதிவாளர் எம் . எப் . ஹிபத்துல் கரீமும், தொழிநுட்ப துறையில் எதிர்கால வேலைவாய்ப்பினை நோக்கிய கற்கை நெறிகளை தெரிவு செய்தல் தொடர்பில் நிந்தவூர் தொழிற்பயிற்சி அதிகாரசபை நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எம் . மஹ்சூன் ஆகியோர் விரிவுரை நிகழ்த்தினர்.

மேலும் இளைஞர்களையும் மாணவர்களையும் பள்ளிவாசல்களுடன் தொடர்புபடுத்துதல் தொடர்பில் மௌலவி எம்.எம். அப்துல் ஹமீட் (அஹ்சானி) உரை நிகழ்த்தியதுடன், மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை சட்ட விதிகள் பற்றி மருதமுனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஜீ. துஸார திலங்க ஜெயலால் விளக்கமளித்தார்.

மருதமுனை அல்பா சுகாதார சேவைகள் நிறுவன அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபை செயலாளர், கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப்பதிவாளர் எம்.எப். எம்.மர்சூக், மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின் (SESEF) செயற்பாட்டு பணிப்பாளர் எம்.ஐ.எம். வலித், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி துல்கர் நையின் துல்ஷான் உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊர்ப்பிரமுகர்கள், நூற்றுக் கணக்கான மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :