வங்கி அலுவலக நேரங்களில் மாற்றம்!



J.f.காமிலா பேகம் -
நாட்டில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு வங்கிகளில் கொடுக்கல் வாங்கல் செய்ய வங்கிகள் திறக்கும் மற்றும் மூடும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முடிந்தளவு டிஜிட்டல் /இணையவழி ஊடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மேலும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வங்கியும் தமது வசதிக்கேற்ப சேவைகளை வழங்க, வங்கி நேரங்களில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.இது சம்மந்தமாக சில வணிக வங்கிகள் வழங்கியுள்ள விளம்பரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இதன்படி இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகள் காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 2மணிவரையும், கொமர்ஷல் வங்கி காலை 9.30 தொடக்கம் மதியம் 1மணி வரையும் வங்கி நடவடிக்கைகளை வார நாட்களில் மேற்கொள்ளும்.இந்த அறிவித்தல் 2022 /06/22 முதல் நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொகொள்ளப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :