தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்களுக்கு கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண. ரன்முத்துக்கல சங்கரத்ன தேரர் நன்றி தெரிவிக்கின்றார்.
இந்த மோசமான காலகட்டத்தில் தமக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் அரிசிப் பொதியை வழங்கியதற்காக இந்த நன்றிகளை தெரிவிக்கின்றார்.
அன்று அசோகச் சக்கரவர்த்தி, தேவநம்பியதீசன் ஆகியோருக்கிடையே இருந்த மானசீகமான நட்பு இந்தியாவிலிருந்து பௌத்த தர்மம் இலங்கைக்கு வர வழிவகுத்தது .
அன்றைய உறவை இன்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள்.அந்த உறவு என்றும் நிலைக்க வேண்டும், இந்த இக்கட்டான கட்டத்திலே அரிசியை வழங்கிய தமிழக முதல்வருக்கும் தமிழக மக்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
என்று தெரிவித்தார்.

0 comments :
Post a Comment