முஸ்லிம் மகளிா் கல்வி வட்டத்தின் 50வது ஆண்டு விழா



அஷ்ரப் ஏ சமத்-
முஸ்லிம் மகளிா் கல்வி வட்டத்தின் 50வது ஆண்டு விழா கொழும்பு ரமடா ஹோட்டலில் இம்முறையும் தலைவியாக தெரிபு செய்யப்பட்ட அமீனா முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் 75க்கும் மேற்பட்ட முஸ்லிம் மகளிர் அங்கத்தவா்கள் கலந்து கொண்டனா். உபதலைவியாக சினாஸ் கரீம், பாத்திமா இஸ்மாயில் , செயலாளராகவும், பொருளாளராக பெரோசியா இஸ்மாயிலும் கலந்து கொண்டனா் 50வது நிகழ்வினை ரையினா காதா் மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தினாா்.

இந் நிகழ்வில் உரையாற்றிய அமீனா முஸ்தபா (ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் பாரியாா் )
எமது கல்வி நிலையம் முதன் முதலாக டி.ஆர்.விஜயவா்த்தன மாவத்தையில் உள்ள நிலையத்தில் கொழும்பு மற்றும் மேல் மாகணத்தில் உள்ள அனைத்து இன பெண்களுக்கும் சுயதொழில் முயற்சிக்காக தொழிற் பயிற்சி நெறிகளை ஒவ்வொரு ஆறு மாதகால மற்றும் மூன்று மாத கால பயிற்சி நெறிகளை பயிற்சியளித்து வருகின்றோம். எமது கல்வி நிலையம் அரச தொழில் பயிற்சி நிலையத்தில் பதியப்பட்ட அங்கிகரிக்கப்பட்ட நிலையமாகும்.

அதன் பின்னா் களுபோவிலை வைத்திசாலைக்கருகில் ஓர் நிறுவனத்தில் அமைத்து அதிலும் பல்வேறு பயிற்சி நெறிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.. கனனி, தையல், வடிவமைப்பு, உணவுப் பண்டங்கள் தயாரித்தல், மொழிப்பயிற்சி நெறிகளும் நடைபெற்று வருகின்றன. கடந்த கொவிட் காலத்தில் பயிற்சிகளை நடாத்த முடியாமல் இருந்தது. தற்பொழுது சகல பயிற்சிகளும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதே போன்று காலி, பாணந்துறை, கஹட்டோவிட்ட, வெளிகம ,வராக்கப்பொல போன்ற பிரதேசங்களிலும் இவ்வாறான தொழிற்பயிற்சி நிலையங்களை அமைத்து அப்பிரதேச மாணவிகளை பயிற்சியளித்து அவா்கள் தமக்கென்று சொந்தக் காலில் முன்னேறுவதற்கு வழிவகுத்துக் கொடுத்து வருகின்றோம்.

அதே போன்று சமூக சேவைகள், பொருளாதாரப் பிரச்சினையில் பின்தளள்ப்பட்ட குடும்பங்களுக்கு உணவு, மற்றும் சில அடிப்படைவசதிகளை உதவி வருகின்றோம். என தலைவி அமீனா முஸ்தபா தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :