நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட அன்றாடம் தொழில்கள் மூலமாக வருமானம் பெறும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல குடும்பங்களுக்கு ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேஷனின் Feed a Family in Sri Lanka எனும் திட்டத்தின் மூலம் உலர் உணவுப் பொதிகள் ஏ.ஆர். மன்சூர் பவுண்டேஷனின் தலைவி சட்டத்தரணி மர்யம் நளீமுடீன் தலைமையில் மூன்றாம் கட்டமாக கோவில், விகாரை, தேவாலயம் மற்றும் மஸ்ஜித்களில் வைத்து விநியோகிக்கப்பட்டது.
இத்திட்டமானது பிரதேச செயலாளரின் ஊடாக கிராம சேவகர்கள் மற்றும் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட விவசாயம், மீன்பிடித் தொழில் ,அவை சார்ந்த கூலித் தொழில்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் சுய தொழில்களில் ஈடுபடும் பல தேவையுடைய குடும்பங்களுக்கு இந்துப் பயனாளிகளிகளுக்கு உபபிரதேச செயலக கோவிலிலும், பௌத்த குடும்பங்களுக்கு
கல்முனை ஸ்ரீ சுபாத்திராமா மகா விகாரையிலும், முஸ்லிம்களுக்கு பெரிய நீலாவனை புலவர் மணி சரிபுதீன் பாடசாலையிலும், கிறிஸ்தவர்களுக்கு கல்முனை திரு இருதய நாதர் ஆலயத்திற்கும் வைத்து விநியோகிக்கப்பட்டது.
விசேடமாக இத்திட்டமானது எமது மக்களின் அன்றாட வாழ்க்கை மட்டமானது இயல்புநிலைக்கு திரும்பும்வரை இன்னும் பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment