பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் வழங்கி வைக்கும் தீர்மானத்தை நறைவேற்றியுள்ள தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து அவர் விடுத்தருக்கும
அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்து உள்ளார்.
அந்த அறிக்கையிலே மேலும் தெரிவக்கப்பட்டுள்ளதாவது,
தமது அரசின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துக்கூறி ஒன்றிய ( மத்திய ) அரசிடம் இதற்கான அனுமதியைக் கோரும் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இப்போதைய எமது பணி இந்திய மத்திய அரசை தமிழக அரசின் தீர்மானத்துக்கு உரிய அனுமதியை வழங்கி ஒத்துழைக்கக் கோருவதாகும். எனவே மத்திய அரசினைச் சென்று சேரும் வகையில் எமது வேண்டுகோள்களை அனுப்பி வைக்கலாம்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது இலங்கைக்கு உள்ளே இனங்களுக்கு இடையில் மட்டுமல்ல , இலங்கைக்கு வெளியே தமிழ்நாட்டிலும் கூட ஓர் அரசியல் புரிதலை உருவாக்கியிருக்கிறது என்பதனை அவதானிக்க முடிகிறது. இந்த புரிதல் தொடர வேண்டும்.
தமிழ்நாடு அரசு, தமிழக முதல்வர், தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
மயில்வாகனம் திலகராஜா
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ( இலங்கை )
தலைமை ஒருங்கிணைப்பாளர் - மலையக அரசியல் அரங்கம்

0 comments :
Post a Comment