திருகோணமலை - நாவற்சோலை பஞ்சகர்ம ஆயுள்வேத வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் (28) விஜயமொன்றினை மேற்கொண்டனர்.
இந்த விஜயத்தின்போது நாவற்சோலை வைத்தியசாலையை பார்வையிட்டதுடன் அங்குள்ள நிலைமைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி சாமஸ்ரீ தேசகீர்த்தி (திருமதி) இ.ஸ்ரீதரிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது குறித்த வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியும், சுதேச மருத்துவ தினைக்கள திட்டமிடல் பிரிவின் வைத்திய அதிகாரியுமான வைத்தியர் எஸ்.சதீஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தார்.

0 comments :
Post a Comment