பொன்மனச் செம்மல் எம்.எஸ். தாஜ்மஹானுக்கு பாராட்டி கௌரவிக்கும் விழா



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
37ஆவது கலாபூஷணம் அரச விருது வழங்கும் விழாவில் கலாபூஷணம் விருதைப் பெற்றுக்கொண்ட இலங்கை பொன்மனச் செம்மல், பொன்தமிழ்க்கவிஞர் கலாபூஷணம் எம்.எஸ். தாஜ்மஹான் கொழும்பு பழைய நகர மண்டபத்தில் வைத்து பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

அக்ஷரா இசைக்குழுவினரின் ஏற்பாட்டில், இலக்கியச் செம்மல் சட்டத்தரணி ரஷீட் எம். இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தினகரன் தினசரி மற்றும் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தெ. செந்தில் வேலவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு,

வரவேற்புரையை இளநெஞ்சன் முர்ஷித், வாழ்த்துரை கலைஞர் கலைச்செல்வன் ஆகியோர் வழங்கியதோடு, வகவத்தலைவர் என்.நஜ்முல் ஹுஸைன், கவித்தென்றல் அலி அக்பர் ஆகியோர் கவிவாழ்த்துப் பாடினர். நிகழ்வை கவிஞர் கிண்ணியா அமீரலி சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில், வகவம் தலைவர் என். நஜ்முல் ஹுஸைன், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், கலைஞர் கலைச்செல்வன், கவித்தென்றல் அலி அக்பர், கலைவாதி கலீல், பாரம்பரியம் புகழ் கலைஞர் எம்.எஸ்.எம். ஜின்னா, அபூஉபைதா மௌஜுத், இம்ரான் நெய்னார், பாடகர் கவிக்கமல், வர்த்தகப் பிரமுகர் பஸ்லிரூமி, நூருல் ஐன் நஜ்முல் ஹுஸைன், கலைஞரும் எழுத்தாளருமான மொழிவாணன், கலாபூஷணம் முஹம்மட் அலி, ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.ஸாகிர் என ஏராளமானோர் கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து அவரைக் கௌரவித்தனர். புகைபடப்பிடிப்பாளர்களான சுரேந்தர், எஸ்.ஏ.கரீம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது கலாபூஷண விருதின் போது கிடைத்த பணப்பரிசை வரிய குடும்பத்தைச் சேர்ந்த, திருமணம் முடிக்கும் நிலையில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு தானமாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் இக்கட்டான சூழ்நிலை கருதி குறிப்பிட்ட நேரத்தில் பாராட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு, மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :