நாட்டு மக்களின் சுபீட்சமான நல்வாழ்வுக்கான விஷேட பூஜை வழிபாட்டு நிகழ்வுகள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இடம்பெற்றது.
இந்த விஷேட பூஜை வழிபாட்டு நிகழ்வுகள் இன்று நல்லிரவு ஆரம்பமாகி காலை 9.30 மணியளவில் அன்னதானத்துடன் நிறைவுபெற்றது. இதற்கு கிழக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் மாகாண திணைக்களங்கள் தங்களின் பங்களிப்புக்களை வழங்கியிருந்தது.
குறிப்பாக, நாட்டு மக்கள் நஞ்சற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் பாரிய பங்களிப்புக்களை செய்து வருகின்றது. அதற்கமைவாக அன்றையதினம் விஷேடமாக தயாரிக்கப்பட்ட இலைக்கஞ்சியை அதிகாலை நேரம் வழங்கி வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment