"சகோதரத்துவம் மற்றும் இன நல்லிணக்கத்தை மேம்படுத்துதல்" எனும் தொனிப்பொருளில் கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
முஸ்லிம் மஜ்லிஸ் சிரேஷ்ட பொருளாளரும் விரிவுரையாளருமான ஏ.எல்.எஸ்.சாபித் தலைமையில், வந்தாறுமூலையில் அமைந்துள்ள பிரதான வளாக நல்லையா ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர். வல்லிபுரம் கணகசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி. ஜே. கென்னடி கௌரவ அதிதியாகவும், பதிவாளர் ஏ.பகிரதன் மற்றும் நிதியாளர் எம்.எம்.எம்.பாரிஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
அஷ்ஷெய்ஹ். ஏ.எம்.அக்றம் (நழீமி) சிறப்புரையாற்றிய இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக உத்தியோஸ்தர்கள் ,ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment