சாதனைபடைத்த ஊடகவியலாளர்களின் பிள்ளைகள் பாராட்டி கௌரவிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் வருடாந்த ஒன்றுகூடல் பொத்துவில் அறுகம்பே புளுவேவ் நட்சத்திர ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை ( 26 ) போரத்தின் தலைவர் கலாபுசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் இடம்பெற்றது.
போரத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் இவ்வருடத்தில் போரத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படும் செயற்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதுடன் , போரத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் 9 ” ஏ ” சித்திபெற்ற என்.கே. ஜுமானா ஹஸீன் , எம்.ஏ.எம்.அப்துர் றஹ்மான் , தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு கலைப்பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்ட அமீர் பாத்திமா இனாபா மற்றும் புத்தசாசன ,சமய ,கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடத்தப்பட்ட அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் பாடலாக்கப் போட்டியில் வெற்றிபெற்ற போரத்தின் உறுப்பினரும் அதிபருமான கவிஞர் பி.முஹாஜரின் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்விற்கு வைத்திய கலாநிதி டாக்டர் கே.எல்.எம்.நக்பர் பிரதம அதிதியாகவும் , சமாதான ஊடக அமைப்பின் தலைவர் எம்.எம்.ஜெஸ்மின் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
அண்மையில் காலஞ்சென்ற ஊடகவியலாளர் அமரர் ரெட்ணம் நடராஜன் அவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :