களுத்துறை மாவட்டத்தில் ஆய்ஷத் ருகையா முதலிடம் பெற்றுச் சாதனை



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் 182 புள்ளிகளைப் பெற்று களுத்துறை மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ள களுத்துறை முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய மாணவி ஆய்ஷத் ருகையா அர்ஷாத் தனது கல்லூரிக்கும் களுத்துறை மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர், அர்ஷத் ஜமால் ஆசிரியை நஸுஹா ரியால் ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியாவார்.
அத்துடன், இவரது இச்சாதனைக்கு அவரது வகுப்பாசிரியை திருமதி சிஹாரா ஹாரூன், ஆசிரியை ரிஸ்வியா ஜுவைம் ஆகியோர் பக்கபலமாகத் திகழ்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கு களுத்துறை நகர சபை உறுப்பினர் ஹிஷாம் ஸுஹைல் நினைவுச் சின்னம் வழங்கிக் கெளரவித்தார். மேலும், இதே பாடசாலை கடந்த ஆண்டுகளிலும் மாவட்டத்தில் முதலிடங்களைப் பெற்றுள்ளது என பாடசாலை அதிபர் திருமதி ஆய்ஷா ஷாபி அலவி குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :