நிந்தவூர் கதீப் பேஸ் இமாம் சம்மேளனத்தினால் நிந்தவூர் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் கெளரவிக்கப்பட்டார்.



நூருல் ஹுதா உமர்-
நிந்தவூரில் உலமாக்களைக் கொண்ட அமைப்பாக இயங்கி வருகின்ற நிந்தவூர் கதீப் பேஸ் இமாம் சம்மேளனத்தின் "வாழும் போதே வாழ்த்துவோம்" எனும் தொனிப் பொருளினடிப்படையில் நிந்தவூர் பிரதேசத்தில் மூன்று முறை தவிசாளராகவும், மக்கள் பணியே தன் பணியென நீண்ட காலமாக சமூக சேவைகளில் ஈடுபட்டு மக்கள் பணியாற்றி வருகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளருமான எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் (24) பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.

அன்மைக்காலமாக நிந்தவூர் பிரதேசத்தில் மக்களுக்காக பணியாற்றி வருகின்ற சமூக சேவையாளர்களை இனங்கண்டு "வாழும் போதே வாழ்த்துவோம்" என்றடிப்படையில் கதீப் பேஸ் இமாம் சம்மேளனமானது கெளரவிப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிகழ்வுகள் சமூகப்பணியாற்றுகின்றவர்களுக்கு ஓர் ஊக்குவிப்பாகவும் ஏனையவர்களுக்கு சமூகப்பணியாற்ற தூண்டுகோலாகவும் அமையுமென்பதில் ஐயமில்லையெனவும் எதிர் காலத்தில் இந்த நிகழ்வுகளில் ஆன்மீக கல்வி கற்று அதனூடாக மார்க்க போதனைகளைச் செய்து வருகின்ற உலமாக்களையும் பாரட்டி கெளரவிப்பதில் இந்த சம்மேளனம் கவனம் செலுத்த வேண்டுமென தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :