றம்புக்கன் ஓயா நீர்த்தேக்க பிரதேசத்தில் 2700 மூலிகை மரக்கன்றுகள் நடும் திட்டம் ஆரம்பித்து வைப்பு!



பைஷல் இஸ்மாயில் -
னாதிபதியின் செழுமையான தொலை நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 30 சதவீதத்தால் காடுகளை உயர்த்தும் தேசிய கருத்திட்டதை உயிர்ப்பிக்கும் நோக்கில் அம்பாறை மாஓயா நில்கல வனப்பாதுகாப்பு பிரதேச றம்புக்கன் ஓயா நீர்த்தேக்க பிரதேசத்தில் 2700 மூலிகை மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யாம்பத் தலைமையில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல், இராஜாங்க அமைச்சர் சிறிர ஜயக்கொடியின் கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளின் அபிவிருத்தி இணைப்பு அதிகாரி வைத்தியர் ஏ.சி.டில்சாத், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளர் சுலைமாலெப்பை நாசிறூன் மற்றும் இராணுவ அதிகாரிகள்,
பொலிஸார், பழங்குடியினர், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இலங்கையில் அருகிவரும் மூலிகை மரங்களை உருவாக்கி அதன் மூலம் பாரம்பரிய வைத்தியத்திற்கு தேவையான உள்ளூர் மருந்து உற்பத்திகளை அதிகரிக்கச் செய்வதுடன், பாரம்பரிய வைத்திய முறைகளை செயற்படுத்தும் தொலை நோக்கத்திற்காகவே இத்திட்டம் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பாரம்பரிய வைத்திய முறையின் மூலம் இயற்கையோடு ஒன்றித்த வாழ்க்கை முறையினையும், நஞ்சற்ற ஒரு தேசத்தையும், சமூதாயத்தையும் உருவாக்குவதற்காக சிறந்த வேலைத்திட்டங்களை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தி வருகிறார். ஜனாதிபதியின் அனைத்துத்திட்டங்களையும் உடனுக்குடன் அமுல்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணம் முன்னின்று செயற்பட்டு வருகின்றது என்றும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :