தொடர்ச்சியாக பொய்யான செய்திகளை வெளியிட்டுவந்த வீரகேசரி பத்திரிகை இன்று அதன் ஒரு படி மேலே சென்று நடந்த சம்பவத்தை தலைகீழாக மாற்றி செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறான வீரகேசரி பத்திரிகையை முஸ்லிம் பிரதேசங்களில் புறக்கணிக்க வேண்டும். என்பதுடன் வீரகேசரி பத்திரிகையை முஸ்லிம் பிரதேச வாசிகசாலைகள், உள்ளுராட்சி மன்றங்களில் காட்சிப்படுத்துவதை தவிர்ப்பதை உறுதிப்படுத்த உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் முன்வரவேண்டும் என்று கிழக்கின் கேடயம் அமைப்பு சார்பில் பிரதம செயற்பாட்டாளர் எஸ்.எம். சபீஸ் வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார்.
அந்த வேண்டுகோள் அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, சமூக உணர்வுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மட்டுமின்றி நீதி, நியாயத்தை விரும்பும் ஊடக தர்மத்தை பேணிநடக்கும் ஊடகவியலாளர்கள் இப்படியான இனவாத சிந்தனை கொண்ட துளியளவும் ஊடக தர்மமற்ற செய்தி நாளிதழுக்கு செய்திகளை அனுப்புவதிலிருந்து தவிர்ந்து கொண்டு கௌரவமிக்க ஜனநாயக தூண்களில் ஒன்றான ஊடக தர்மத்தை பாதுகாக்க வேண்டும்.
இது முதல் தடவையல்ல. தொடர்ந்தும் இந்த பத்திரிகை முஸ்லிங்களை இலக்குவைத்து பொய்யான, கட்டுக்கதைகள் அடங்கிய செய்திகளை கடந்த காலங்களில் வெளியிட்டுள்ளது. இவர்களுக்கு தொடர்ந்தும் மன்னித்தும் மறந்தும் ஆதரவு வழங்கி வந்த பத்திரிகை வாசகர்கள் இவர்களின் செய்தியில் உள்ள நம்பகத்தன்மையை அறிந்து இவர்களின் பத்திரிகையை வாசிக்க கூடாது என்றும் பத்திரிகை முகவர்கள் சமூகப்பணியாக கொண்டு வீரகேசரி குழும பத்திரிகைகளை விற்பனை செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment