74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி விற்பனை மும்முரம்



பாறுக் ஷிஹான்-
74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்ட வர்த்தக நிலையங்கள் அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் வாகனங்களில் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு வருகின்றதை காண முடிகிறது.
எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு இனம், மதம் ,மொழி, வேறு பாடுகளை விசேட மத வழிபாடுகள் இப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் சுதந்திர தினத்தன்று வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் ,தேசியக் கொடியை ஏற்றுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வீடுகளில் மரக்கன்றுகளை நாட்டுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய கொடிகள் தற்போது வர்த்தக நிலையங்களில் 50 முதல் 100 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை ,நிந்தவூர், உள்ளிட்ட பகுதியில் பொது மக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்கின்றதை அவதானிக்க முடிகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :