கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி தரம் 10 பகுதியின் பரிசளிப்பு விழாவும், கலை நிகழ்ச்சியும், ( Batch) குறூப் டீசர்ட் வெளியிடும் நிகழ்வும் அண்மையில் மாணவ மஜ்லிஸ் ஏற்பாட்டில் கல்லூரியின் கேட் முதலியார் எம்.எஸ் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.
தரம் 10 பகுதித் தலைவர் ஷஃபி எச். இஸ்மாயில் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேற்படி நிகழ்வில் இரண்டாம் தவணைப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, சிறப்பாக கடமையாற்றிய மாணவ, வகுப்பு தலைவர்களுக்கும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
பாடசாலை வரலாற்றில் நீண்ட காலத்திற்குப் பிறகு சட்டத்தரணியாக தகுதிபெற்ற ஆசிரியர் ஷஃபி எச். இஸ்மாயில் அவர்களும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வின் பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.எச்.எம். அபூபக்கர், ஏ.எச்.எம்.அமீன், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் டாக்டர் சனூஸ் காரியப்பர் , பிரதி பகுதித் தலைவர் எம்.பி.எம். மஹ்ரூப், உதவிப் பகுதி தலைவர் எம்.எம்.சாஜித் அலி, வகுப்பாசிரியர்கள், பாட ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment