“வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் பணிகள்” என்ற அரசின் கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் நிதியோதுக்கீட்டின் மூலம் ஹோராப்பொல முஸ்லிம் வித்தியாலத்தில் சுற்று மதிலினை அமைப்பதற்கான அடிக்கல் 2022.02.04 அன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் நடப்பட்டது.
இலங்கை சனனாயக சோஷலிச குடியரசின் 74 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு இவ்வடிக்கல் நாட்டு வைபவத்தோடு மாபெரும் சித்திரக் கண்காட்சி ஒன்றும் பாடசாலை நிருவாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தரம் 1 தொடக்கம் 11 வரையான வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களினால் வரையப்பட்ட 600 இற்கும் அதிகமான சித்திரங்கள் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையும் பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினை பாடசாலை அபிவிருத்தி சங்கம், ஹோராப்போல அல் பலாஹ் DX சமூக முன்னேற்ற கழகம், ஐக்கிய விளையாட்டு கழகம் ஆகியோர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment