இலங்கையின் 74 வது சுதந்திர தின நிகழ்வினை கொழும்பு 12 பீர்சாகிப் ஜூம்ஆப் பள்ளிவாசலின் நலன்புரிச்சங்கம், நியாஸ் மௌலவி பவுண்டேசன் மற்றும் இஹ்ஸானிய அரபுக் கல்லூரியும் இணைந்து அறபுக் கல்லூரியின் பணிப்பாளர் லமீர் ஹாபிஸ் ஹரத் தலைமையில் இன்று பள்ளிவாசலின் முன்பாக நடைபெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் ஒமர் காமில் கலந்து கொண்டிருந்தார். அத்துடன் சர்வமத தலைவர்களான கொலன்னாவ நரடாகிமி தேரர், அருட் தந்தை ஜேய் மரியரட்ணம், சுதர்சன்சர்மா குருக்கள், மற்றும் கெசல்வத்த பொலிஸ் பொறுப்பதிகாரி சி.ஐ. ரம்யசிறி, போக்குவரத்துப்பிரிவின் பொலிஸ் அதிகாரி எச்.எம்.கே.டி. ஹேரத்உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது நான்கு சமயத் தலைவர்களின் சமய ஆசிகளுடன் ஒமர் காமில் அவர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு பீர்சாஹிப் வீதி பேள் பாலர் பாடசாலை மாணவர்களால் தேசிய கீதமும் இசைக்கப்பட்டதுடன் அப்பகுதியைச் சேர்ந்த நான்கு சமய மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment