மூட நம்பிக்கையால் பறிபோன சிறுவனின் உயிர்



மினுவாங்கொடை நிருபர்-
டல்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆதிமுல்ல பிரதேசத்தில் வீடொன்றின் அறையொன்றில் 10 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாக, படல்கம பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியமை தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குறித்த வீட்டை சோதனையிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 7 ஆம் திகதி குறித்த சிறுவனின் தொண்டையில் சளி சிக்கியதால் சுகயீனமுற்றுள்ளதாகவும், நோய் குணமடைவதற்காக பெற்றோர்கள் மத வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்வாறு மத வழிபாடுகளின் போது சிறுவன் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர், சிறுவனின் உயிர் மீட்கப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டில் இருந்த தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்படவுள்ளதுடன், பிரேதப் பரிசோதனையும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
படல்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :