கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
2022 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி. உமாமகள் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (12) சிறப்பாக இடம்பெற்றது.
இவ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதேசவாரியாக மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் பற்றியும் திணைக்களங்கள் சம்பந்தமான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டன.
குறித்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ .சார்ள்ஸ் நிர்மலநாதன், கௌரவ. விணோ நாகரதலிங்கம், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், அரச பதவிநிலை உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிகள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :