கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் அமைப்புகளில் ஒன்றான பஹ்ரியன் 98 அமைப்பினரின் 2022 ஆண்டுக்கான ஆண்டுப் பொதுக்கூட்டம் நேற்று (11 )
வெள்ளிக்கிழமை மாலை பாடசாலையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் பாடசாலையின் அதிபர் எம்.ஏ.எம். பைசால் பஹ்ரியன் அமைப்பின் ஆலோசகர் ஆசிரியர்ஜாபீர் ஏ காதர், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ். எல். ஹமீட்
மற்றும் அமைப்பின் தலைவர் யூ.கே. லாபிர் செயலாளர் ஏ.ஆர். சப்ரான் ஆகியோருடன் அமைப்பின்உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலையின் எதிர்கால கல்வி புறப்பாடவிதான அபிவிருத்தி மற்றும் பாடசாலையின் உட்கட்டமைப்புஅபிவிருத்தி அதில் பழைய மாணவர் சங்கத்தின் பங்களிப்புகள், கடந்த காலங்களில் பாடசாலையின்அபிவிருத்தி பணிகளில் பஹ்ரியன் அமைப்பின் மெச்சத் தகுந்த பங்களிப்புகள், தற்காலத்தில் பாடசாலையில் காணப்படும் பிரதான குறைபாடுகள் அதனை நிபர்தி செய்வதில் பெற்றோர் வழங்க வேண்டிய பங்களிப்புபோன்ற விடயங்கள் தொடர்பில் பாடசாலையின் அதிபர் தனது கருத்துக்களை பரிமாறினார். பின்னர்மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஹமீட், அமைப்பின் ஆலோசகர்ஆசிரியர் ஜாபிர் ஏ காதர், அமைப்பின் தலைவர் லாபிர் மற்றும் அமைப்பின் அங்கத்தவர்கள் தங்களதுஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
நிகழ்வின் அங்கமாக பஹ்ரியன் 98 அமைப்பினர் பாடசாலையின் எதிர்கால கல்வி அபிவிருத்தியை முன்னிறுத்திபாடசாலையின் நூலகத்திற்கு
ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான நூல் தொகுதியை வழங்கி வைத்தனர்.
நிகழ்வின் இறுதியாக பஹ்ரியன் 98 அமைப்பின் இலட்சினை பாடசாலையின் அதிபர் பைசால் அவர்களினால்வெளியிடப்பட்டது.
0 comments :
Post a Comment