இசங்கணிச்சீமை தாறுல் பிஹாம் பாடசாலையின் வித்யாரம்ப விழா



நூருல் ஹுதா உமர்-
க்கறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட இசங்கணிச்சீமை வட்டாரத்தில் நீண்டகாலமாக இயங்காமல் காணப்பட்ட பாலர் பாடசாலையை 2021 ஆம் ஆண்டு உயிரோட்டமான ஒரு பாடசாலையாக அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ எம் ஐய்யூபின் அயராத முயற்சியினால் உருவாக்கப்பட்டு சிறப்பான அடைவுகளை அடைந்து புதன்கிழமை 2022 ஆம் ஆண்டில் வித்தியாரம்ப நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இசங்கணிச்சீமை அல்- கமர் வித்தியாலயத்தின் அதிபர் எச்.தாலிபின் தலைமையில் பாலர் பாடசாலை நிறைவேற்றுக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும், இப்பாலர் பாடசாலையை உருவாக்கியவருமான ரீ. எம் ஐய்யூப் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மற்றும் சிறப்பு அதிதிகளாக அக்கரைப்பற்று அல்-முனவ்வரா கனிஷ்ட பாடசாலையின் அதிபரும் பிரதி கோட்டக் கல்விப் பணிப்பாளருமான எம் ஐ எம் உவைஸ் மற்றும் அஸ்- சிபாயா பாடசாலையின் அதிபர் முஹம்மட் சமீம் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :