தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தில் பயிற்சிப்பட்டறை.


சலீம் றமீஸ், எம்.வை.அமீர்-
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தினது உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பிரிவின் ஏற்பாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, சுற்றாடல் அமைச்சு ஆகியவைகளின் அணுசரனையுடன் விஞ்ஞான துறை மற்றும் விஞ்ஞான துறையற்ற பாடசாலை ஆசிரியர்களுக்கான 'உயிர் மூலக் கூறு மாற்றியமைக்கப்பட்ட அங்கிகள் மற்றும் உயிர் பாதுகாப்பு' தொடர்பான பயிற்சிப் பட்டறை நேற்று (25) தொழில்நுட்பவியல் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் சமூகங்களை தொடர்புபடுத்தும் உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் அவர்களின் திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பிரிவின் துறைத்தலைவர் கலாநிதி ஏ.என்.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்ச்சிப் பட்டறையில்; பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் பிரதம அதிதியாகவும், தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் கௌரவ அதிதியாகவும் மற்றும் சுற்றாடல் அமைச்சின் உயிரியல் பல்வகை செயலகத்தின் உதவிப் பணிப்பாயளர் சுரேனி பத்திரன, உயிர்முறைமை பாதுகாப்புத் திட்டத்தின் தேசிய திட்ட முகாமையாளர் சானக்க குணவர்தன, பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் வெளிவாரியான உத்திகள் மேம்படுத்தல் விஷேட நிபுணர் மிஹிரி கந்தநாராச்சி உட்பட பல்கலைகழக விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சிப் பட்டறையானது இன்றும் (26) பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு நடைபெறவுள்ளதாக துறைத் தலைவர் கலாநிதி முபாறக் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :