"சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பதற்கு எதிர்கால சந்ததியான மாணவர்களை வளப்படுத்தல்" எனும் தொனிப்பொருளிலான பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வொன்று செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தலைமையில் இடம் பெற்றது.
அம்பாரை மாவட்ட செயலக சிறுவர் மேம்பாடுப் பிரிவு மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாடுப்பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸன் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார்.
மாவட்ட செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஷரீபா சாஜஹானின் நெறிப்படுத்தலில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஜே.குறைஸா, சாய்ந்தமருது கமு/ கமு/ அல்-ஜலால் வித்தியாலய அதிபர் எம்.ஐ. எம். சயீபுதீன் ஆசிரியர்.யூ.கே.எம்.முபாரக் மாவட்ட சிறுவர் கழகத்தலைவர் ஏ.ஆர்.எம்.ஜப்ரான், கிராம உத்தியோகத்தர் எம்.எம்.பாதிமா ஜெய்மி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். சுரைபா ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது கமு/ கமு/ அல்-ஜலால் வித்தியாலய மாணவர்கள் இவ்விழிப்புணர்வு செயலமர்வில் கலந்து கொண்டனர். மாவட்ட சிறுவர் கழகத்தின் சிறுவர் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வு அறிக்கை செய்தல் எனும் செயற்திட்டத்திற்காக கமு/ கமு/ அல்-ஜலால் வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதே வேளை இத்திட்டத்தில் இணைந்து கொண்டுள்ள மாணவ மாணவிகளுக்காக சான்றிதழ்களும் இங்கு வழங்கி வைக்கப்பட்டன குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment