பேராசிரியர் அல்லாமா மா.மு.உவைஸிற்கான நூற்றாண்டு விழாவும் நினைவு மாநாடும்



எம்.ஏ.றமீஸ், எம்.ஜே.எம்.சஜீத்-
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித் துறையினால் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட பேராசிரியர் அல்லாமா மா.மு.உவைஸிற்கான நூற்றாண்டு விழாவும் நினைவு மாநாடும், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது என பல்கலைக்கழகத்தின் தவிசுப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தெரிவித்தார்.
உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் எதிர்வரும் செவ்வாய்க்கிமை(18) பி.ப 2.30 மணிக்கு இடம்பெறவுள்ள இந்நிகழ்வின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.

கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அளகப்பெரும மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் இந்நிகழ்வின்போது கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கையின் பிரபல்யம் மிக்க இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படும் பேராசிரியர் அல்லாமா மஹ்மூத் முகம்மது உவைஸ் நினைவாக இடம்பெறும் இந்நிகழ்வின்போது நினைவு முத்திரை வெளியீட்டு வைக்கப்படவுள்ளதோடு, அந்நாருக்கான நூற்றாண்டு ஞாபகச் சின்னமும் அறிமுகப் படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, இந்நிகழ்வின் ஆய்வு மாநாடு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, பேராசிரியர் அல்லாமா உவைஸ் பற்றியதான அறிமுக உரையினை நிகழ்த்தவுள்ளார்.

'தமிழ் இலக்கிய வரலாற்றில் ம.மு உவைஸ் பணிகள்' என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் கருத்துரை நிகழ்த்தவுள்ளார். 'இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்று எழுதுகையில் ம.மு.உவைஸ் ஓரு விமர்சனப் பார்வை' என்னும் உரையினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் செ.யோகராசா நிகழ்த்தும் அதேவேளை, இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் உவைஸின் படைப்புக்கள் மீதான உரையினை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வன் நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் இஸ்லாமிய தமிழ்த்துறை வரலாற்றில் பன்முக ஆளுமையாக திகழந்து கல்விப்புலமையினால் மக்களை ஒன்றிணைத்து மகத்தான சேவைகளை வழங்கிய உலகறிந்த பிரபல்யம் மிக்கவரும், இஸ்லாமிய இலக்கியப் பாரம்பரியத்தினை தமிழ் இலக்கிய பண்பாட்டுடன் ஒன்றிணைத்த பேராசிரியர் அல்லாமா ம.மு.உவைஸ் பற்றி அவர் நினைவினைப் பறைசாற்றும் வகையில் இவ்வாறானதோர் நிகழ்வினை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளமையானது இப்பிராந்தியம் பெருமை கொள்வதாய் அமைகின்றது என தென்கிழக்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார்ந்தோர் சுட்டிக் காட்டுகின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :