அதாவுல்லா எம்.பி சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் இனியும் ஏமாற்ற கூடாது-ஏ.சி.யஹியாகான்



பாறுக் ஷிஹான்-
சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை வைத்து - இன்னும் இன்னும் அந்த மக்களை தேகா தலைவர் ஏமாற்றக் கூடாதென முகாவின் பிரதிப் பொருளாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியிலுள்ள அவரது அலுவலகத்தில் திங்கட்கிழமை (3) மாலை ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

கல்முனை மாநகர சபையின் பதவிக்காலம் பெப்ரவரி மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் - 2022 பெப்ரவரியில் சாய்ந்தமருது நகர சபை மலரும் என்று கூறி 9000 வாக்குகளை கபளீகரம் செய்த அதாவுல்லா - பொதுத் தேர்தலிலும் அம்மக்களின் வாக்குகளை பெற்றார். ஆனால், நகர சபை இதுவரை சாய்ந்தமருதுக்கு கிடைக்கவில்லை.

சாய்ந்தமருதைச் சேர்ந்த - தேகா முக்கியஸ்தர் சலீமும் - அதாவுல்லாவுடன் இணைந்து , சாய்ந்தமருது நகர சபை கோஷத்தை முன்வைத்து வாக்குகளை பெற்று ஏமாற்றி வருகின்றார்.இதுவொரு ஆரோக்கியமான செயற்பாடல்ல..
ஒருபோதும் - அதாவுல்லாவினால் நகர சபையை பெற்றுத் தர முடியாது. அவருக்கு அரசாங்கத்தில் பலம் இல்லை என்பது வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டவுடனேயே அறிய முடிந்தது.

2022 பெப்ரவரி மாதத்துக்கு இடையில் அதாவுல்லாவும் சலீமும் நகர சபையை பெற்றுத் தர வேண்டும். இல்லையேல் - தங்களால் முடியாது என மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக கூறி ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.. இன்னும் இன்னும் சாய்ந்தமருது மக்களை ஏமாற்ற முனையக் கூடாது என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :