கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அணுசரனை மற்றும் வழிகாட்டலில் நாவிதன்வெளி பிரதேச செயலகம் நடாத்திய குறும்படப் பட்டறை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் சுகாதார வழிமுறைகளுடன் நாவிதன்வெளி பிரதேச கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.
கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.ஷினாஸின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடாகியிருந்த இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் உரையாற்றுகையில்ஆரம்ப காலங்களில் ஒரு ஆவண, விவரணப் படங்கள் எடுக்க வேண்டுமென்றால் பெரிய கமராக்கள் தேவை. ஒரு படம் அல்லது குறும்படம் எடுக்க வேண்டுமென்றால்
நீண்ட நாட்கள் தேவை. ஆனால் இன்றைய நவீன காலத்தில் அப்படி ஒன்றும் தேவையில்லை. ஒரு சிறிய அன்ரோயிட் கையடக்கத் தொலைபேசி ஒன்று இருந்தால் போதும்.
குறுகிய நேரத்துக்குள் பல குறும்படங்களை உருவாக்கிவிட முடியும் எனக் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்
எமது நாவிதன்வெளி பிரதேசத்தை பொருத்தமட்டில் இப்பகுதியில் அதிகமான சமூகப் பிரச்சினைகள் நிறைந்து காணப்படும் ஒரு இடமாகும். கட்டாயம் இந்தப் சமூகப் பிரச்சினைகளை குறும்படங்கள் மூலம் சமூகத்துக்குள் வெளிக் கொண்டுவருவதன் ஊடாக எமது மக்களின் சமூகப் பிரச்சினைகளுக்கு ஓரளவேனும் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியுமாவதுடன் காலத்தின் தேவைக்கேற்ப படைப்புக்கள் வெளிக் கெணரப்பட வேண்டும். அதற்கு கலைஞர்களாகிய நாங்கள் முன்னின்று உழைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
எங்களின் பல செயற்பாடுகள் சேர்ந்துதான் நல்லதொரு படைப்பு உருவாகிறது. இப்படியான படைப்புக்கு ஒருவரோ அல்லது ஒரு படைப்புக்கு பல பேரின் பங்களிப்புக்கள் இருக்கக்கூடும். இப்படியான படைப்பு எல்லோரையும் திருப்திப்படுத்தும் கூடியதாகவும் வரவேற்பை பெறக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றார்.
சிறுகதை, பாடலாக்கம், கவிதை, கட்டுரை, பாரம்பரியக் கலை மற்றும் இசை போன்று குறும்படங்கள் தயாரிக்கும் கலைஞர்கள் உருவாகி அவர்களின் மூலம் எமது சமூகத்தில் காணப்படும் பல பிரச்சினைகளை வெளிப்படுத்தப்பட வேண்டும். உங்களில் ஏற்படும் மாற்றமே சமூக மாற்றம் என வேண்டிக்கொண்டார்.
இக்குறும்படப்பட்டறை நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் உதவிப் பிரதேச செயலாளர் திரு.பி.பிரணவரூபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி இ.லதாகரன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றின்ஸான், கிராம நிருவாக உத்தியோகத்தர் மனோஜ், முஸ்லிம்
கலாசார உத்தியோகத்தர் அஸாத், இந்த கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.சுஜீவனி, கிழக்கு மாகாண கலாசார உத்தியோகத்தர் வக.நகுல நாயகி மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.அன்பாஸ் கலைஞர்கள் மாணவர்கள் மற்றும் குறும்பட, நாடக கலைத்துறையினர் ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment