சாய்ந்தமருது
தமிழ் பேசும் கட்சிகளுடன் இணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்காக வரையப்பட்ட சர்ச்சைக்குரிய வரைபில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கையொப்பமிடுவதில்லை என்ற தகவல் வெளியாகியது.
இது சமூக வலைத்தளங்கள் மூலமாக கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களின் எதிர்ப்பு காரணமாகவே கையொப்பமிடும் திட்டத்தை தலைவர் கைவிட்டுள்ளார் என்பது புரிகின்றது.
தலைவர் கையொப்பமிட உள்ளார் என்ற தகவல் வெளியான உடனேயே “தலைவர் கையொப்பமிடுவதில் குற்றமில்லை ஆனால் இந்த வரைபில் உள்ளடங்கப்பட்டுள்ள விடையங்கள் பற்றி முஸ்லிம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” என்று அப்போது பதிவிட்டிருந்தேன்.
முதலில் ஒன்றை விளங்க வேண்டும். அதாவது ஒரு சமூகத்தின் தலைவர் என்பவர் தூர நோக்குடன் தீர்க்கதரிசனமான கருத்துக்களை மக்களுக்கு போதிப்பதுடன், உறுதியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தீர்மானங்களை மேற்கொண்டால் அதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதுதான் ஒரு சிறந்த தலைமைக்கு அழகு.
ஆனால் எமது தலைமை அவ்வாறல்ல. மக்களை பற்றி சிந்திக்காமல் தனது மனோநிலைக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பதும், பிரச்சினை ஏற்பட்டவுடன் அதனை கைவிடுவதும், வருத்தம் தெரிவிப்பதும் இன்று நேற்றல்ல இருபது வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஒன்றாகும்.
அவ்வாறான முட்டாள்தனமான தீர்மானங்களை அல்லக்கைகள் மற்றும் எடுபிடிகள் மாத்திரமே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பார்கள். அவர்களுக்கு சமூகத்தைப்பற்றி எந்தவித அக்கறையுமில்லை. சமூகத்தின்மீது அக்கறையுள்ளவர்கள் எவரும் சமூகவிரோத செயல்பாடுகளைப் பார்த்து மௌனமாக இருக்க மாட்டார்கள். இவ்வாறு சமூகம் சார்ந்து கருத்து கூறுபவர்களை தலைவருக்கு எதிரானவர்களாக சித்தரிப்பதும் ஓர் அறியாமையின் வெளிப்பாடாகும்.
இந்த விவகாரத்தில் தமிழ் கட்சிகள் தயாரித்த கடிதத்தில் ஒப்பமிடுவதா ? இல்லையா ? இந்த இரண்டு தெரிவுகளில் தலைவர் எதனை தேர்ந்தெடுக்கின்றாரோ அதற்கான நியாயமான காரணத்தை முஸ்லிம் மக்களுக்கு தெளிவாக விளக்கி கூறியிருக்க வேண்டும்.
ஆனால் எந்தவித நியாயமான காரணங்களையும் கூறாமல் கொழும்பில் இருந்துகொண்டு தன்னிச்சையாக முடிவெடுப்பதும் பின்பு எதிர்ப்பு கிளம்பியவுடன் அதனை கைவிடுவதும் ஒரு பலயீனமான தலைமைக்கு எடுத்துக்காட்டு என்று கூறுவதா ? அல்லது போதிய சமூக அரிசியல் பற்றிய தெளிவின்மை என்று கூறுவதா ? அல்லது சுயநல அரசியலின் வெளிப்பாடு என்று கூறுவதா ? அல்லது அனைத்தினதும் மொத்த வடிவம் என்று கூறுவதா ? எப்படி கூறுவதென்று தெரியவில்லை.

0 comments :
Post a Comment