கொவிட்டை கட்டுப்படுத்த பிளாஸ்ரிக் பாதுகாப்பு திரைக்கவசம்!



வி.ரி.சகாதேவராஜா-
கொவிட் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான பிளாஸ்ரிக் பாதுகாப்பு திரைக்கவசத்தை செலான் தனியார் வங்கி கிழக்கிலங்கையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயணிக்கும் முச்சக்கரவண்டிகளுக்கு விநியோகித்துவருகிறது.

செலான் வங்கி முன்னெடுத்துவரும் சமுகநலத்திட்டத்தின் ஓரங்கமாக இத்திட்டம் கிழக்கிலங்கையில் கிழக்குமாகாண பிராந்திய முகாமையாளர் எம்.எச்.எம்.றிஸ்மிஹூசைனின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

செலான்வங்கியின் சம்மாந்துறைக்கிளை நேற்று இச்செயற்றிட்டத்தை சம்மாந்துறைக்கிளை முகாமையாளர் நா.மோகனப்பிரகாஸ் தலைமையில் ஆரம்பித்துவைத்தது.

சம்மாந்துறை நகரில் மாணவர்கள் பயணிக்கும் முச்சக்கரவண்டிகளுக்கு கொவிட் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான பிளாஸ்ரிக் பாதுகாப்பு திரைக்கவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வங்கியின் ஏனைய உத்தியோகத்தர்கள் நலன்விரும்பிக்ள் சுகாதாரஅதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :