இலங்கையைச் சோ்ந்த ஒரு பொறியியலாளா் அன்மையில் பாக்கிஸ்தானில் வைத்து மத தீவிர போக்குடையவா்களால் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தை நாம் அவதானிக்கும்போது அவ் விடயத்தினை எவ்வாறு பாக்கிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான்கான் கையாண்டாா். அவர் எடுத்த நடவடிக்கைகளை முழு உலகமும் அதனை கூர்ந்து அவதானித்தது. அவா் உடன் செயல்பட்டு எடுத்த நடவடிக்கைகள் மிகவும் சிறப்பானதொரு நடவடிக்கையாகும். அவரின் சீரானதொரு அரச தலைமைத்துவம் எனக் காட்டுகிறது. அவா் அடிமட்டத்திற்கே இறங்கிச் சென்று எவ்வளவு விரைவாக செயல்பட்டாா்.
அவா் பகிரங்கமாகவே இலங்கை மக்களிடம் மண்னிப்பும் கோரியிருந்தாா். அதி கூடிய நிவாரணமும் வழங்கினாா். சம்பந்தப்பட்டவா்களை உடன் கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்தினாா். இவ்வாறு எமது நாட்டின் அரச தலைவர்கள் நம் நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடம் அடி மட்டத்துக்கு இறங்கி ஒரு பகிரங்கமாக தேசிய ரீதியில் மண்னிப்புக் கோரினாலேயே எமது நாட்டின் அரைவாசிப் பிரச்சினைகள் தீா்ந்துவிடும். அதன் பிறகு பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணங்கள் நஸ்ட ஈடுகள் வழங்கப்டல் வேண்டும். இதுவே தேசிய நல்லிணக்கமாகும். என திரு. திவாரட்டன கருத்து தெரிவித்தாா்.
சிவில் அதிகாரியாகவும் - யுத்தம் முடிவடைந்த காலகட்டத்தில் மீள் புனா்வாழ்வு மற்றும் அத்தியவசிய சேவை ஆணையளராகவும், முன்னாள் ஜனாதிபதியின் வடகிழக்கு மீள் புனா்வாழ்வு புனரமைப்பு விசேட செயல் அணியின் செயலாளராக சேவைசெய்த திரு. எஸ்.பி திவாரத்தின ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மனித உரிமை மற்றும் முன்னைய அறிக்கைகளை கேட்டறியும் ஆணைக்குழுவின் முன் தோன்றி மேற்கண்டவாறு தெரிவிததார். இந் நிகழ்வு பி.எம்.ஜ. சி. எச். சில் உயா் நீதிமன்ற நீதியரசரும் ஆணைக்குழுவின் தலைவா் துலிப் நவாஸ் தலைமையில் நடைபெற்றது.
அவா் அங்கு தொடா்ந்து சாட்சியமளிக்கையில் -
தமிழா் முஸ்லிம் மக்கள் நல்லவா்கள் ,எனது 40 வருட கால அரச சேவையில் அவா்களோடு இணைந்து சிறப்பாக சேவையாற்றியுள்ளேன். அவா்கள் கொடுத்த ஒரு விடயத்தினை சிறப்பாக செய்து தருவாா்கள். அவா்களிடம் பொய், களவு, ஏமாற்றுக்கள் இல்லை. நீதியானவா்கள். பணிவானவா்கள். நான் இலங்கை மத்தியவங்கியில் சேவை செய்யும் போது நிறைய யாழ்ப்பாண அதிகாரிகளே எனது தலைமை அதிகாரிகளாக பணியாற்றினாா்கள். அன்று அவா்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வந்து வேலை செய்துவிட்டு மீண்டும் யாழ்ப்பாண புகையிரதத்தில் யாழ் சென்று மறுநாள் கொழும்புக்கு வேலைக்கு வருவாா்கள். அவ்வாறானதொரு காலம் இருந்தது.
கடந்த வாரம் நடைபெற்ற ஒரு சம்பவத்தை இங்கு உதாரணத்திற்கு கூற விரும்புகின்றேன். யாழ்ப்பாணத்தில் வாழும் நண்பர் ஒருவரின் மகளின் அரச திணைக்கள இடமாற்றம் விடயமாக எனது உதவியை நாடினாா். அதனை செய்து கொடுத்தேன். அந்த இடமாற்றக் கடிதம் எனது கையில் கடிதம் உள்ளது. எனது நண்பா் என்னுடன் வங்கியில் தொழில் செய்தவர் - அவரின் மகள் யாழ்ப்பாணத்திலேயே படித்து அங்கேயே பட்டம் பெற்று அம் மாவட்டத்திலேயே வாழ்ந்தவா் அவருக்கு சிங்கள மொழி வாசிக்கவோ பேசவோ தெரியாது. அவா் அங்கு ஒர் அரச அலுவலகத்தில் தொழில் ஒன்றையும் பெற்றுள்ளார். இருந்தும் அப் பெண் வடக்கில் உள்ள அரச அலுவலகத்திற்கு நாளாந்தம் 50 கி.மி. பிரயாணம் செய்யவேண்டியுள்ளது. அவா் யாழில் உள்ள அரச திணைக்ளம் ஒன்றுக்கு மாறுதல் கடிதத்தினைப் பெறுவதற்கு கொழும்பிற்கு வரவளைத்து அவா் கையில் இடமாற்றக் கடிதம் ஒன்றையும் அடித்து கொடுத்துள்ளார்கள்.
அப் பெண் எனக்கு அழைப்பை எடுத்து அதிகாரிகள் வழங்கிய கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது. நான் எங்கு சென்று எனது வேலையைப் பாரம் எடுக்க வேண்டும் என ஒன்றுமே எனக்குத் தெரியாது. தனிச் சிங்களத்தில் மட்டுமே இக்கடிதம் உள்ளது. ஜயா, இதனை எனக்கு ஆங்கிலத்தில் மொழிபெயா்த்து கூறுங்கள் என அக்கடிதத்தினை எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிவைத்துள்ளார். ஆகவே தான் இன்றும் மொழிப்பிரச்சினைகள் தீர்கப்படவில்லை. இன்றும் தெற்கில் உள்ள அரச அதிகாரிகள் தனிச் சிங்களத்திலேயே வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு அலுவல்கள் கடிதங்களை அனுப்புகின்றார்கள் இம் மொழிப்பிரச்சினைக்கு அரச மட்டத்தில் இருந்து கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும். இந்த மொழிப்பிரச்சினைகள் இன்று மட்டுமல்ல ஜி.ஜி.பொண்னம்பலம் காலம் தொட்டு சம்பந்தன் வரையிலான காலத்திலிந்து வருகின்றது.
2006-2009 வரை காலப்பகுதியில் நான் அத்தியவசிய சேவைகள் ஆணையளராக கடமையாற்றினேன். அதன் பின்னா் யுத்தம் முடிவடைந்தன் பின்னா் 2015ல் வடக்கின் புனா் வாழ்வு நடவடிக்கை மீளக் குடியமா்த்துதல், கன்னிவெடிகளை இரானுவத்தாருடன் இணைந்து அகற்றி அப்பிரதேசங்களில் வாழ்ந்த மக்களுக்கு சகல அடிப்படை வசதிகளையும் வழங்கி மீளக்குடியமா்த்தினோம், பாடசாலைகள், பாதைகள், குடிநீர், மிண்சாரம், போன்ற அபிவிருத்திகளையும் துரித மீள் அபிவிருத்தியின் கீழ் செயல்படுத்தினோம். இத் திட்டத்திற்கு முற்று முழுதாக ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் சகல உதவிகளையும் வழங்கியது. அங்கு வாழ்ந்த மூவினங்களுக்கும் காணிப்பிரச்சினைகள் இருந்தன. யுத்த காலத்தில் மன்னாா். யாழ்ப்பாணம் வாழ்ந்த முஸ்லிம்கள் தமது காணிகளை அடையாளம் காணப்பதற்காக பெரிதும் கஸ்டப்பட்டாா்கள். அவா்கள் புத்தளத்தில் இடம்பெயா்ந்து முசலி, மாந்தை போன்ற பிரதேசங்களில் மீளக்குடியமா்வதற்கு முயற்சித்தாா்கள்.
யுத்தகாலத்தில் சகல விடுதலைப்புலி உறுப்பினர்களது புனா்வாழ்வு நடவடிக்கைகள், கண்னிவெடிகளை அகற்றும் திட்டங்களை இரானுவத்தினரும் சில வெளிநாட்டு தொண்டா் நிறுவனங்களும் இணைந்து முன்னெடுத்தாா்கள். அவா்கள் 640 கிராமங்களில் (1419 கி.மீ) சுத்தப்படுத்தினாா்கள். ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அதிகாரிகளது சான்றிதழ் கிடைத்த பின்னரே மக்களை மீளக்குடியமா்ததினோம்.
அப்போது ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி இலங்கை வதிவிடப்பிரநிதியாக இருந்த அதிகாரி மிகவும் சிறப்பாக எங்களுக்கு ஆதரவு வழங்கினாா்கள். எனது காலப்பகுதியில் வடக்கில் சிறப்பானதொரும் வெற்றிகரமான மீள்குடியேற்றத் திட்டம் செயற்படுத்தப்பட்டது. அவை பற்றிய 500 பக்கங்கள் கொண்ட அறிக்கையும் மக்களது அபிவிருததிகள் வீடுகள், ’குடிநீர் ,பாடசாலைகள் பாதைகள் போன்ற அபிவிருத்திகள் மக்களிடம் கையளிக்கும்போது எடுக்கப்பட்ட வர்ணப்படங்களுடன் இந்த அறிக்கையை அழகாகத் தயாரித்து 400 பிரதிகள் ஜக்கிய நாடுகள் அமையம்,தொட்டு சகல நாடுகளின் துாதுவா்கள் முக்கியமான உலகத் தலைவா்களுக்கெல்லாம் அனுப்பிவைக்கப்பட்டன. அது வெற்றியளித்தது. ஜக்கிய நாடுகள் மணித உரிமை அமையத்தில் அக் காலகட்டத்தில் தாருஸ்மானின் அறிக்கைக்கு ஒரு பதில் அறிக்கையாக இவ் அறிக்கை காணப்பட்டது. ஆனால் இலங்கையில் உள்ள மக்கள் ஊடக நிறுவனங்கள் இங்குள்ள அரசியல்வாதிகள் இவ் அறிக்கை அறிந்து கொள்ளவில்லை, அதனை பிரச்சாரப்படுத்தவில்லை. ஆனால் வெளிநாட்டவா்கள் இந்த அறிக்கையை உண்னிப்பாக அவதானித்து பாராட்டுதல் கடிதங்களும் அனுப்பிவைத்தனா். இவ் அறிக்கை பிரதி ஒன்றை இந்தக் கமிஷனுக்கு திரு. திவாரத்தின கையளித்தார்.
அதன் பின்னா் ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழுக்கான ஓ.என்ஆர் , எல்.எல். ஆர்.சி மற்றும் உண்மையை அறியும் ஆணைக்குழு , போன்ற ஆணைக்குழுக்களிடமும் அவ்வப்போது சாட்சியமளித்துள்ளேன். என திவாரட்டன கூறினாா்.
0 comments :
Post a Comment