வவுனியா ,தவசிக்குளம் செவ்வானம் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த வெற்றிக்கிண்ண கிறிக்கெட் சுற்றுப் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை செவ்வானம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
11 வீர்ர்கள் கொண்ட 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட முறையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மேற்படி சுற்றுப் போட்டியில் சம்பியன்களாக தெரிவு செய்யப்படும் அணிக்கு 20,000 ருபா பணப்பரிசும் சம்பியன் கிண்ணமும் , 2வது இடம்பெறும் அணிக்கு 10,000 ருபா பணப்பரிசும் கிண்ணமும் , தொடர் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்படுபவருக்கு 5,000 ருபா பணப்பரிசும் , ஆட்ட நாயகநாக தெரிவு செய்யப்படுபவருக்கு 3,000 ருபா பணப்பரிசும் வழங்கப்படும்.
வவுனியா பிரதேசத்திலுள்ள அனைத்து அணிகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக அணியின் பெயரினை பதிவு செய்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment