சிசேரியன் சத்திரசிகிச்சை ஒரு உயிர்காக்கும் சத்திரசிகிச்சையாகும். இது பிரசவத்தின் போது தாய் அல்லது குழந்தைக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ள சந்தர்ப்பங்களில், அல்லது சாதாரணமாக குழந்தை பிரசவிக்க முடியாத நிலைமைகளில் செய்யக்கூடிய மிக முக்கியமான சத்திரசிகிச்சையாகும்.
உதாரணம்
1. பிரசவத்தின் போது குழந்தையின் இதயத்துடிப்பு வீதம் திடீரெண்டு குறைதல்
2.குழந்தையின் தொப்புற்கொடி முதலிலேயே வெளிப்படல் Umbilical Cord Prolapse
3. குழந்தையின் மாக்கொடி கருப்பையின் கழுத்துப்பகுதியை அடைத்துக்காணப்படல் - Placenta Praevia
4…
இவ்வாறு பல்வேறு காரணங்கள் உள்ளன.இந்த சத்திரசிகிச்சை செய்யப்படும் வீதம் உலகலாவிய ரீதியில் படிப்படியாக அதிகரித்துச்செல்கின்றது என்று
கூறினால் மிகையாகாது.
சிசேரியன் சத்திரசிகிச்சை கண்டறியப்படாத கால கட்டத்தில் ஒவ்வோர் தாய்மாரும் பிரசவத்தை தாண்டுவதும் ஆரோக்கியமான குழந்தையை பிரசவிப்பதும் ஒரு மிகப் பெரிய சவாலாகவே இருந்திருக்கும்
இச்சத்திரசிகிச்சை மிகவும் பரவலாக செய்யப்படுவதுடன் சில சந்தர்ப்பங்களில் தேவையின்றி செய்யப்படுகின்றது என்பது பலரின் கருத்தாக காணப்படுகின்றது.
இச் சத்திரசிகிச்சை தொடர்பாக பல்வேறு தவறான கருத்துக்கள் பரவலாகக் காணப்படுகின்றன. இதன் காரணமாக அத்தியாவசிய கட்டத்தில் தாய் சத்திரசிகிச்சைக்கு மறுக்கும் போது குழந்தையின் அல்லது தாயின் நலத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதில் பல நன்மைகள் இருப்பதுடன் சில சந்தர்ப்பங்களில் பக்கவிளைவுகளும் ஏற்படலாம்
இச்சத்திரசிகிச்சை வழமையாக spinal anaesthesia அதாவது முதுகில் செலுத்தும் சிறிய ஊசி மூலம் தொப்புளுக்கு கீழ்ப்பகுதி விரைக்குமாறு செய்யப்பட்டு மேற்கொள்ளப்படும்.
முற்றாக மயக்கி செய்வதை விட இது பாதுகாப்பானது. செயற்கைச்சுவாசம் வழங்கத்தேவையில்லை. தாய் குழந்தைக்கு உடனடியாக பாலூட்டலாம். அத்துடன் 4/5 மணித்தியாளம் வரை வலிநிவாரணத்தையும் கொடுக்கும்.
இவ்வூசியால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம் என்று மிகவும் தவறான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன.
பொதுவான பக்கவிளைவுகள்
1. சத்திரசிகிச்சையின் போது இரத்த அழுத்தம் blood pressure குறைவடைவதால் வாந்தி , மயக்க நிலை ஏற்படல்
2.வலி
3.சத்திரசிகிச்சையின் பின்னர் தலைவலி ஏற்படல்.
இவைகுறுகிய கால பக்கவிளைவுகளாகும். இதனால் நீண்டகால ரீதியில் நிரந்தமாக நரம்புப்பாதிப்புகள் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக அரிதாகும் (1/50 000).இது பாதையில் நடந்து செல்லும் போது விபத்துக்காளாகும் சந்தர்ப்பத்தை விடக்குறைவாகும்.
மேலதிக தகவல்களுக்கு
https://www.rcoa.ac.uk/.../2020-05/03-YourSpinal2020web.pdf
சத்திரசிகிச்சையின் பக்கவிளைவுகள்
1. சத்திரசிகிச்சையின் போது வெளியாகும் இரத்தத்தின் அளவு சுகப்பிரசவத்தைவிட சிறிதளவு அதிகம்.
2. சத்திரசிகிச்சையின் போது சிறுநீர்ப்பை குடல் என்பவை எதேற்சையாக வெட்டப்படக்கூடிய வாய்ப்பு
3. காயம் குணமடைய தாமதமாகலாம். இல்லாவிட்டால் infection தொற்றுக்கள் உருவாகலாம்.
4. வலி - சாதாரண பாரமான வேலைகளை செய்யும் நிலையை அடைய சிறுது காலம் தேவை
5. நீண்டகாலரீதியில்
அடுத்த கர்ப்பம் மீண்டும் சிசேரியன் சத்திரசிகிச்சையாகும் வாய்ப்பதிகம்
பிரசவத்தின் போது கருப்பையில் உள்ள காயம் பிரியும் வாய்ப்பு (1/200)
அடுத்த கர்ப்பத்தில் குழந்தையின் மாக்கொடி காயத்தின் மீது பதிந்தால் சிலரில் அது காயத்தை ஊடுவி சதைடன் ஒன்று சேரும் morbidly adherent placenta சிறு வாய்ப்புண்டு
அவ்வாறு ஏற்படின் மிக அதிகளவு இரத்தப்போக்கு மற்றும் கருப்பையை இழக்கவேண்டிய நிலைமைகள் என்பன ஏற்படலாம்.
எனவே, இதில் பல நன்மைகள் இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதனால் அத்தியாவசிய காரணமின்றி இதை செய்யக்கூடாது
சுகப்பிரசவமே எல்லாவிதத்திலும் தாய்க்கும் சேய்க்கும் சிறந்தது. சத்திரசிகிச்சை தேவைப்படின் செய்யவேண்டிய விடயமாகும்.
அடுத்தவிடயம் ஏதோ ஒர் காரணத்திற்காக ஒர் குழந்தை சிசேரியன் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டால் மீண்டும் சுகப்பிரசவத்தை நாடலாமா முடியாதா என்பதாகும்
தொடரும் …
இக்கட்டுறையின் நோக்கம் இச்சத்திரசிகிச்சைதொடர்பான மூடநம்பிக்கைகளை போக்குவதற்கே தவிர சிசேரியன் சத்திரசிகிச்சை சுகப்பிரசவத்தைவிட சிறந்ததல்ல
0 comments :
Post a Comment