அனைவரும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும்
பிரதேசசபை உறுப்பினர் எம்.ராமச்சந்திரன்
நுவரெலியா மாவட்டத்திற்கு கிடைத்த பிரதேச செயலகங்களை உப பிரதேச செயலகங்களாக திறந்து வைத்து கொண்டாடுவது ஆளும் தரப்பு மலையக அரசியல்வாதிகளின் வங்குரோத்;து அரசியல் நிலைமையை தெரிவாக புலப்படுத்துகிறது என நோர்வூட் தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
நோர்வூட் பிரதேசசபைக்கு உட்பட்ட நோர்வூட் நிவ்வெளிகமவில் உப பிரதேச செயலகம் இன்று திறந்து வைத்தமை தொடர்பில் ஊகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நுவரெலிய மாவட்டத்தில் ஐந்து புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கு பிரகடனம் செய்யப்பட்ட அதே வர்த்தமானியில் வெளியான காலி மாவட்டத்தில் மூன்று புதிய பிரதேச செயலகங்களும் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆனால், நுவரெலியா மாவட்டத்துக்கு பிரகடனம் செய்யப்பட்டிருந்தப்போதிலும், கடந்த வாரம் தலவாக்கலையிலும் இன்று (31.12.2021) நோர்வூட் நிவ்வெலிகமவிலும் உப பிரதேச செயலகமாக திறக்கப்பட்டுள்ளமை அநீதியானதும் பாரபட்சமானதுமாகும். வர்த்தமானியில் பிரகடனம் செய்தவாறு 5 புதிய பிரதேச செயலகங்களையும் அமைக்க முன்வரவேண்டும். அதைவிடுத்து உப செயலகங்கள் திறப்பதால் எவ்வித பயனும் இல்லை.
2020 ஆம் ஆண்டு மார்ச் 01ஆம் திகதி அம்பகமுவ பிரதேச செலகத்திற்கு உட்பட்ட நோர்வூட் மஸ்கெலியா பிரதேசசபை அதிகாரப்பகுதியில் புதிய பிரதேச செயலகம் ஆரம்பிக்க சகல நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசியல் காழப்;புனர்ச்சியால் மலையக அரசியல்வாதிகளினால் அது தடுத்து திறுத்தப்பட்டதுடன் நோர்வூட் பிரதேசசபையிலும் பல்வேறு குறைகளை காரணங்களை முன்வைத்து புதிய பிரதேசசெயலகம் ஆரம்பிப்பதற்கு எதிராக சபைத்தலைவரினால் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது
அந்த பிரேரணைக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் குறைபாடுகளை காரணம் காட்டி கிடைக்கின்ற பிரதேச செலயகத்தை இல்லாமல் செய்யாது நோர்வூட் பிரதேச செலயகத்தை ஆரம்பிக்க வேண்டும் என எனது கருத்தை முன்வைத்திருந்தேன்
இவ்வாறு இழுத்தடிக்கப்பட்ட புதிய பிரதேச செயலகம் இன்று உப பிரதேச செயலகமாக திறந்து வைக்கப்பட்டுள்ளமை வேதனையளிக்கிறது. சமகாலத்தில் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட காலி மாவட்ட பிரதேச செலயகங்களை ஆரம்பிக்கும் இன்றைய இனவாத அரசாங்கம் நுவரெலியா மாவட்டத்தில் உப செயலங்களாக ஆரம்பிக்கப்படுவதை ஆளும் அரசாங்கத்திற்கு முக்கு கொடுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கேள்வி எழுப்பாதது அவர்களின் வங்குரோந்து அரசியலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
எனவே கிடைத்த உரிமையை மீண்டும் பெற்றுக்கொள்ள அனைவரும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளர்.
0 comments :
Post a Comment